Custom Search

ரேணுகா எழும்பு பிள்ளை வேலைக்கு போக நேரமாகி விட்டதல்லவா எழும்பு என்று அவளின் அம்மா சாந்தி அவளை எழுப்ப அவளோ அம்மா எனக்கு இன்று உடம்பு சரியில்லை யென்று மீண்டும் போர்வையை இழுத்து மூடிக்கொண்டு படுத்து விட்டாள் அவள் அம்மாவோ விட வில்லை என்னடி சொல்கிறாய் உடம்பு சரியில்லையா இல்லை அங்க ஏதாவது பிரச்சினையா எனகேட்க அப்படி ஒன்றும் இல்லை சொல்கிறாள் இல்லை நீ எதையோ மறைக்கிராய் என்று அம்மா சொல்ல ஓம் அம்மா என்கிறாள் ரேணுகா..அவளின் அண்ணனோ குறுக்கால வந்து இவா வேலைக்கு போய்த்தான் நாங்கள் சோறு தின்ன வேணுமாக்கும் என்று சொல்ல அந்த வேலையை விடு என்றான் அவள் அண்ணன் ஆனால் அவள் அம்மாவோ நீ சும்மா இரடா என்று பொம்பிளை பிள்ளை வேலைக்கு போனால் உனக்கு என்ன என்று கேட்க அவனோ உனக்கு என்ன அம்மா தெரியும் இப்பத்தைய சூழ் நிலைகளை பார்க்க போனால் வேலையும் மண்ணாங்கட்டியும் சும்மா வீட்டில இருக்க சொல்லும் அவளை தம்பி இப்ப பெண் பிள்ளைகள் தான் குடும்பத்தை சுமக்குதுகள் வேலைக்கு போய் உனக்கு என்ன தெரியும் நீயும் கல்யாணம் கட்டினால்தால் தான் தெரியும் குடும்ப நிலமை இரண்டு பேருக்கும் வேலையென்றால் எந்த பிரச்சினை இல்லை பாரு என்றாள் அவள் அம்மா ஆனால் எனக்கு கடுகளவும் விருப்பமில்லை என்றான் வாணன் சொல்லிவிட்டு அவன் வேலைக்கு செல்கிறான்
...........அவள் அம்மாவோ என்ன பிரச்சினையென கேட்க ரேனுகாவோ நான் /எல் [உயர்த்தரம்] படிக்கும் போது அந்த கடைக்கார அக்காவின் மகனுக்கு என் மேல் விருப்பம் அம்மா என்னிடம் வந்து அவன் நான் விரும்புவதாகவும் உன் விருப்பத்தை சொல்லு எனவும் கேட்டான் அம்மா நான் அன்றிருந்த நிலமையில் அவனுக்கு நாங்கள் இருக்கிற நிலமை உங்களுக்கு தெரியும் தானே இப்ப என்னால் எதும் சொல்லமுடியாது படித்து ஏதாவது வேலைகிட்டிய பிறகு சொல்கிறேன் என்று சொல்லிவிட்டேன் அவங்கள் வேறு வசதியான ஆட்கள் தானே அம்மா என்றாள் ரேணு இப்ப என்னிடம் திரும்பவும் வந்து கேட்கிறான் அம்மா என் பின்னாலேயே வாரான் அதுதான் வேலைக்கு போக சங்கடமாக கிடக்குது அங்க யாருக்கும் தெரிந்தால் என்னாகும் என் நிலமை எனக்கு அவன் மீது விருப்பம் இல்லை என்றாள் ரேணு அம்மாவோ அவனா அந்த பொடியன் நல்ல பொடியன் தானே குடிக்கிறதில்லையாம்,வெறிக்க
��றதில்லையாம் எந்தகெட்ட பழக்கமும் இல்லை தானே என்று கேள்விபட்டேன் நம்ம அண்ணா வுக்கு தெரிஞ்ச பையன் தானே ஓம் அம்மா ஆனால் எனக்கு விருப்பம் இல்லை என்றாள் அவள் அம்மாவோ உனக்கு பிடிக்கவில்லையென்றால் சொல்லவேண்டியதுதானே அவனிடன் அன்று சொன்னேன் வேலைகிடைத்த பிறகு சொல்கிறேன் என்று ஆனால் இப்ப .......................சரி சரி உனக்கு விருப்பம் இல்லையென்றால் விட்டு விடு நான் யாரிடமாவது சொல்லி சொல்லிகொள்கிறேன் நீ இப்போ வேலைக்கு போ என்றாள் சாந்தி ரேணு வேலைக்கு சென்று விட்டாள்

வாணன் வந்த பிறகு அம்மா தம்பி உனக்கு சேதி தெரியுமா நம்ம வசந்தி அக்காவிட மகன் தயான் இருக்கிறான் அல்லவா அவனுக்கு நம்ம ரேணு மேல விருப்பம் போல என்று நடந்ததை சொல்ல ம்ம்ம் இதுதானா பிரச்சினை அதை நான் பார்த்துக்கொள்கிறேன் என்றான் அவன் சரி தம்பி சண்டை பிடித்து பிரச்சினை பண்ணாம அவன் படித்த பொடியன் அவனுக்கு விளக்கமாக சொல் என்றாள் சாந்தி வாணனும் தயானை சந்திக்க தயானைப்பார்த்து அதுதான் அவள் அன்றைக்கே சொல்லிவிட்டாள்தானே எதுக்கு மீண்டும் மீண்டும் போய் அவளுக்கு தொந்தரவு கொடுக்கிறாய் நான் உன்னோடு சண்டை போடவரவில்லை நாளைக்கு அவளுக்கு நீபெயர் வேண்டி கொடுத்து விலகிவிட்டால் என்னாவது அவள் வாழ்க்கை என்றான் தயான் எதுவும் பேசாமல் தலையை குனிந்து கொண்டு நின்றான் நான் இதை உங்கட வீட்டில் சொல்லி பெரிது படுத்த விரும்பவில்லை அதனால இந்த பிரச்சினை இப்படியே போகட்டும் என்றான் வாணன் சரி அண்ணே இனி இப்படி நடக்காது என்று சொல்லிவிட்டு செல்கிறான் தயான் தான் கட்டிய காதல் கோட்டை சரிய ஆரம்பித்தது வீட்டுக்கு விரைந்தான்

அவன் அம்மாவுக்கும் இதை பற்றி தெரியாது என்ன தம்பி ஒரு மாதிரியாக இருக்குறாய் என கேட்க ஒன்றும் இல்லை அம்மா லேசான தலைவலி அவ்வளவுதான் சரி பனடோல் போடு என சொல்ல அவனோ அதை காதில் வேண்டிக்கொள்ள வில்லை தனது அறைக்குள் சென்று தூங்க ஆரம்பித்தான் ஆனால் முடியவில்லை அவளுடன் அந்த் கற்பனையில் வாழ்ந்த் வாழ்க்கை அது அந்த தலையணைக்கு மாத்திரம் தான் தெரியும் அதையே நினைத்து நினைத்து கொண்டு அந்த இரவை கழித்தான் பகலாக அடுத்த நாள் காலை தபால்காரன் வந்து மணியடிக்க அந்த கடித்தை பார்க்க வேலை வந்து விட்டது கிராம உத்த்யோகத்தர் வேலை கிடைத்தது திருகோணமலையில் அந்த அனுமதி பத்திரம் கையில் கிட்டினாலும் அவனுக்கு அந்த வேலை வேண்டா வெறுப்பாக இருந்தது ஆனால் அவன் அம்மா விடவில்லை நீ போக வேண்டும் என்றா ..சரி அது இருக்கட்டும் அப்பா காலையில எதுவும் சாப்பிடாம வயலுக்கு போயிருக்காரு இந்த காலை சாப்பாட்டை கொடு என்று கொடுக்க தயானும் சாப்பாட்டை வாங்கிகொண்டு தன் சைக்கிளை எடுத்து கொண்டு போக வழியில் வேலைக்கு போகும் ரேணுவை காண்கிறான் அவள் பின்னே போன அவனது சைக்கிள் அன்று சற்று வேகமாக அவளை தாண்டி சென்றது அவளும் குடையை மடக்கி கொண்டு குனிந்து கொண்டு போனாள்..மீண்டும் வீட்டை அடைகிறான் அம்மா வேலைக்கு செல்ல தேவையான பொருட்களை எடுத்து பையினுள் இட்டு ஆயத்தம் செய்கின்றாள் அவனது அம்மா தாய் தந்தையரிம் விடை பெற்று வேலைக்கு செல்கிறான் தயான்
........மாதங்கள் மூன்று கழிந்தன விடுமுறையில் வந்து செல்வது வழக்கம் ஆனால் தயானோ வேலையென்று சொல்லிவிட்டு வரவிரும்புவது இல்லை ஊருக்கு அவ்வப்போது நண்பர்களுக்கு தொலைபேசியில் அழைத்து பேசுவது வழக்கம் அப்போது நண்பர்கள் அவன் காதில் டேய் தயான் ரேணு வேலைசெய்கிற இடத்தில யாரையோ விரும்புகிறாள் போல கதையடிபடுகிறது அதுக்கு அவனோ அவள் எங்கே இருந்தாலும் நல்ல படியாக இருக்க வேண்டும் அதுதான் எனது ஆசையென்று கூறிக்கொண்டான் தயான் ஆனால் நடந்ததோ அவளை விரும்பிய அந்த வாலிபன் அவளுக்கும் பெயரை வாங்கிகொடுத்துவிட்டு ஊருக்கும் பெயரை வாங்கிகொடுத்துவிட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டான் ரேணுகாவோ வேலையை விட்டு வீட்டுக்குள் அமர்ந்தாள் ஊர்மக்களின் பேச்சுக்கள் மத்தியில் இந்த நிலமையில் தான் தயான் தன் வேலையை மாற்றிக்கொண்டு தன் ஊருக்கு வருகின்றான் ஊரிலே வேலைகிடைத்தது சந்தோசமாக இருந்தாலும் ஒரு வேதனைதான் அங்கு வீட்டில் சந்தோசமாக இருந்தான் அப்போது அவங்க வீட்டுக்குள் இந்த கதை அடிபட காதில் வாங்கிகொண்டான் தயான்

ஊரில் வேலையை ஆரம்பித்த போது அவள் வீட்டுக்கு போக நேரிட்டது அங்கத்தவர் பதிவுகள் பற்றி விபரம் திரட்டுவதற்க்காக அங்கு சென்றான் கதவில் இரண்டு தட்டு தட்ட தன் கனவு தேவதை கலைந்த கூந்தலுடன் வந்து கதவை திறந்து விட்டு ஓடுவதை கண்டான் அவனுடன் பேசாமல் இவனும் அங்கு நிற்க அவளின் அம்மா என்ன தம்பி இப்ப வேலை இங்கேயாம் ஊரோடு நல்லதா போச்சு என்று சொல்ல ஓம் என தலையை ஆட்டி கொண்டான் ஏதாவது குடிக்கிறீங்களா என கேட்க இல்லை நான் வந்து இந்த பேப்பர நிரப்ப வேண்டும் அதுக்குத்தான் வந்த நான் அப்போதே வாணனும் வர என்ன தயா எப்படியிருக்கிற ம்ம் பரவாயில்லை என்று சொல்ல இரு கடைக்கு போய்ட்டு வாரன் இல்லை அண்ண எனக்கு எதுவும் வேண்டாம் . மீண்டும் சொல்கின்றான் விவரங்களை பதிந்து முடியவே ரேணுவின் அம்மவோ என்ன தம்பி இன்னும் கல் யாணம் கட்டயில்லை நிறைய இடத்தில கேட்டு வந்தவங்களாம் ஓம் கல்யாணம் முடிக்க வேணும் என்ற நினைப்பு இருந்துச்சு ஆனா இப்ப இல்லை என்று சொல்கிறான் தயான் எங்கே உங்க மகள் என்று கேட்க கதவுக்கு பின்னால் ஒளிந்திருக்கிறாள் பாரு தம்பி என்று சொல்கிறாள் சாந்தி தன் முகத்தை காட்டாமல் ஒளிந்தாள் ரேணுகா சரி நான் வருகிறேன் என்று சொல்லிவிட்டு வெளியேறுகிறான் தயான் ......ரேணுவின் தாயாரோ நல்லதெல்லாம் நாய்க்கு தெரியாது என்று சொல்லி தன் மகளுக்கு சொல்லாமல் சொல்கிறாள் வாணனும் வாய் பேச முடியாமல்

கற்பனை கலந்த கதை

0 comments:

விடுப்பு செய்திகள்

Ihr Browser unterstützt Inlineframes nicht oder zeigt sie in der derzeitigen Konfiguration nicht an.