Custom Search


அரங்கு அழுத




எங்கள் ஒவ்வொருத்தரின் வாழ்க்கையும் அனுபவித்த சுகங்கள், சுமந்து வந்த சுமைகள், தொலைத்து விட்டு வந்த சொந்தங்கள்... பிரேம் கோபாலின் ஏழு நிமிட அரங்காற்றுகை பேசியதெல்லாம் எங்களின் வாழ்க்கையைப்பற்றியது.









நாங்கள் யாசிக்கின்ற சமாதானத்தின் குறியாக இறுதியில் ஒரு புறாவைப் பறக்க விட எண்ணினோம். மிருகவதைச் சட்டத்தின் கீழ் மறுத்து விட்டார்கள். இங்கே மிருகவதைச் சட்டம்...!!! ஆனால், அங்கே உறவுகள்......

நீர் நிரம்பி வழிகின்ற கண்களுடன் அவன் சகோதரி கேட்கின்ற அந்த வரிகள்... "நாங்கள் இப்ப அகதிகள்... இந்தியாவே உன்னால தான் முடியும்.... எங்களுக்காக இதைச் செய்... கைவிட்டு விடாதே...."

* * *

அது இப்போதைக்கு மீண்டும் மீண்டு வராத காலம். ஆம்... இறுதியாக வந்து போன சமாதான ஒப்பந்த காலத்தின் 2003 ஆம் ஆண்டில் ஓர் நாள்...

யாரும் இலகுவில் நுழைந்து விடாத எங்கள் கல்லூரியில் மேடையேற்றுவதற்காக வன்னியிலிருந்து நாடகக்குழு ஒன்று வந்திருந்தது. கல்லூரி சமூகத்துடன், பருத்தித்துறை பிரிகேட் ராணுவத்தளபதியும் கூட இருக்க அவர்கள் முன்னிலையில் அரங்கு திறந்தது. இலங்கை சுதந்திரம் பெற்றதாக கூறப்படும் 1948 தொடக்கம் வட்டுக்கோட்டை தீர்மானம் ஊடாக அன்றைய நாள் வரை நாங்கள் யாசித்த சமாதானமும், அதைத் தட்டிப்பறித்த கரங்களும் அரங்கில் வெளிச்சமிடப்பட்டன.

அதில் ஒரு காட்சி.... வெள்ளைச் சீருடையுடன் ஒன்றாக பள்ளி சென்று வந்த அண்ணனும் தங்கையும் பிறிதொரு நாளில் சந்திக்கின்றனர். பட்டினி வயிற்றுடன் தங்கை... அண்ணனின் இடுப்பில் கறுத்தத்துணி கட்டப்பட்டிருந்தது. அதற்கும் மேலாக அவன் அணிந்திருந்த தொப்பி குறிப்பில் அவன் யாரென உணர்த்தியது. அண்ணன் பெயர் சொல்லி எவருமில்லாத தங்கை அழைக்கின்றாள். அவன் கடமையோ வேறொரு பெயர் சூட்டி அவனை அழைக்கின்றது. அப்போது அங்கு வழிந்தோடிய பாசத்தை அரங்கில் எழுந்த விசும்பல்களும், மனம் அழுது விட்ட கண்ணீர்களும் தான் பேசின.

இன்று வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்

2 comments:

நான் பார்த்து விட்டு காலையிலேயே இருந்து 10 வாட்டி பார்த்தாச்சு மச்சான் ஒரே அழுகை...வந்து விட்டது மச்சான்

இந்தப் பதிவு முற்றுமுழுதாக இதன் நகல்.
http://kadaleri.blogspot.com/2009/05/blog-post_3176.html

அந்தப்பதிவரின் அனுமதியுடன் தான் இதனை இட்டுள்ளீர்களோ நானறியேன். ஆனால், மூலப் பதிவை குறிப்பிடாமல் திரும்பவும் பதிவேற்றுவது நல்லதல்ல.
நன்றி

விடுப்பு செய்திகள்

Ihr Browser unterstützt Inlineframes nicht oder zeigt sie in der derzeitigen Konfiguration nicht an.