இரு பெரும் பிஸ்தாக்களின் யுத்தம் – Microsoft vs Google Microsoft மற்றும் Google இடையாலான போட்டி சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. அண்மையில்தான் Google இற்குப் போட்டியாக Microsoft தனது புதிய தேடுபொறியான bing இனை களத்தில் இறக்கியது. சும்மா இருக்காத Google, Microsoft இனது இயங்குதளத்திற்குப் போட்டியாக தனது புதிய இயங்குதளமான Google Chrome OS இனை அறிவித்தது. அந்த சூடு தணியுமுன்பாகவே Microsoft அடுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது Google இன் Docs இற்குப் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதாவது Microsoft office இன் அடுத்த பதிப்பான Microsoft office 2010 இல் ஆன்லைனில் பயன்படுத்தும் வசதியையும் வளங்குகின்றது. இந்த Web based applications அவற்றின் ஆன்லைன் தன்மையால் install செய்ய எடுக்கும் இடமும் குறைவாகவே இருக்கும். மேலும் அவற்றை இணையத்தில் Save செய்யவும், உருவாக்கிப் பயன்படுத்தவும், அடுத்தவருடன் பகிரவும் இலகுவாக இருக்கும். Google இன் Docs இல் இப்போதிருக்கும் வசதிகளை விட இது அதிகளவான வசதிகளைக் கொண்டிருக்கும்.
இந்த வசதியை இலவசமாகவே Microsoft வளங்கவிருக்கிறது. அதற்குத் தேவையானது ஒரு Windows live கணக்கு மாத்திரமே. அது இல்லாதவர்கள் இலவசமாக உருவாக்கிக்கொள்ளவும் முடியும். இந்த Microsoft office 2010 இன்னும் சில மாதங்களிலேயே பாவனைக்கு வரவிருக்கிறது.
இதுவரை நாளும் இணையத்தில் ஜாம்பவானாகத் திகழ்ந்த google இற்கும், மென்பொருட் துறையில் பிஸ்தாவான Microsoft உம் மோதிக்கொள்வது அடுத்த தலைமுறைக்கான கணினித்துறையின் வளற்சிநான் ஆரம்பம் எனக் கொள்ளலாம். எது எப்படியோ, ஊர் ரெண்டுபட்டா கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பதுபோல, இனி நம்ம காட்டில மழைதான்
Labels
- From Vajai TV (1)
- கஞ்சிபாய் (1)
- தமிழ் கதைகள் (1)
Welcome
நன்றி
Blog Archive
-
▼
2009
(33)
-
▼
July
(16)
- இரு பெரும் பிஸ்தாக்களின் யுத்தம் – Microsoft vs Go...
- இந்த நாய்குட்டி ஐலவ்யூ சொல்லுது..
- இலவசமாக ஐ போன் வேணுமா?
- மனிதனைப் போலவே உணர்ச்சிவசப்படும் இயந்திர மனிதன்
- புரட்சிகரமான அறுவைச் சிகிச்சை மூலம் பார்வையை மீளப்...
- சூரிய மண்டலத்துக்கு வெளியே மிகவும் பிரகாசமான கோள்
- கூகிள் ஆபரேடிங் சிஸ்டம்
- File களை அழிப்பதற்கு ஒரு மென்பொருள்
- (வீடியோ) நெவர் லண்டில் மைக்கல் ஜக்ஸனின்ஆவி? எச்சரி...
- கோப்புகளை பகிர கணினியை இணைய வழங்கியாக மாற்றுதல்
- மைக்ரோசாப்ட்டின் இலவச ஆண்டிவைரஸ் மொர்ரோ
- நினைத்தாலே நகரும் 'வீல் சேர்
- தினமும் ஒயின் குடித்தால் நீண்டநாள் வாழலாம்
- AVI கோப்புகளை MP4 கோப்புகளாக மாற்ற
- கூகிள் குரோம் இப்பொழுது தமிழில்
- நெருப்பு நரி (FireFox) 3.5 தமிழ் version
-
▼
July
(16)
Tamil Font
business hill tourist count advertisements
foreign money Tamil= Hollywood
actors Microsoft sun computer adobe Dubai
Blog Archive
-
▼
2009
(33)
-
▼
July
(16)
- இரு பெரும் பிஸ்தாக்களின் யுத்தம் – Microsoft vs Go...
- இந்த நாய்குட்டி ஐலவ்யூ சொல்லுது..
- இலவசமாக ஐ போன் வேணுமா?
- மனிதனைப் போலவே உணர்ச்சிவசப்படும் இயந்திர மனிதன்
- புரட்சிகரமான அறுவைச் சிகிச்சை மூலம் பார்வையை மீளப்...
- சூரிய மண்டலத்துக்கு வெளியே மிகவும் பிரகாசமான கோள்
- கூகிள் ஆபரேடிங் சிஸ்டம்
- File களை அழிப்பதற்கு ஒரு மென்பொருள்
- (வீடியோ) நெவர் லண்டில் மைக்கல் ஜக்ஸனின்ஆவி? எச்சரி...
- கோப்புகளை பகிர கணினியை இணைய வழங்கியாக மாற்றுதல்
- மைக்ரோசாப்ட்டின் இலவச ஆண்டிவைரஸ் மொர்ரோ
- நினைத்தாலே நகரும் 'வீல் சேர்
- தினமும் ஒயின் குடித்தால் நீண்டநாள் வாழலாம்
- AVI கோப்புகளை MP4 கோப்புகளாக மாற்ற
- கூகிள் குரோம் இப்பொழுது தமிழில்
- நெருப்பு நரி (FireFox) 3.5 தமிழ் version
-
▼
July
(16)
நண்பர்களே நான் கீளே குறிப்பிடும் இணையத்துக்கு சென்று உங்களுக்கு தேவயான் போன் ஐ தெரிவு செய்து Rigester பண்ணவும், உங்களுக்கு ஒரு refferal இலக்கம் தருவார்கள், அதைவைத்து poins ஐ சேர்க்க வேண்டும்... ஒவ்வோரு Model போனுக்கும் ஒவ்வேரு poins உள்ளது.. அதை அடைந்துவிட்டால் போன் உங்களை நாடி வரும்....
மனிதனைப் போலவே உணர்ச்சிவசப்படும் இயந்திர மனிதன் robot மனிதனைப் போலவே உணர்ச்சிவசப்படும் இயந்திர மனிதன் "ரோபாட்"உருவாக்கப்படுவது உறுதியாகி விட்டது! ஆண், பெண் "ரோபாட்"உருவாக்குவது சுலபமாகி விடும் மணமக்கள் கிடைப்பதில் சிக்கல் இருக்காது; பெண் ரோபாட்டை திருமணம் செய்து கொள்ளலாம். அதுக்கு கூட ரோபாட் தயார் தான்.
அதற்கேற்ப உணர்ச்சிப்பூர்வமான குணங்கள் அதனிடம் இருக்கும்.-என்ன
தலை சுத்துதா... பிரிட்டன் விஞ்ஞானி டேவிட் லெவி என்பவர் தான் இப்படி சொல்லியிருக்கிறார். கலிகாலம் முத்திப்போச்சு...ன்னு பெரியவர்கள் சொல்லி வருகின்றரே... அது உண்மை தான் போலிருக்கிறதே...' என்று நினைக்கிறீர்களா... சரி தான் போலும்! வீட்டில், ஆபீசில், தொழிற்சாலையில் வேலைகளை செய்ய ரோபாட்' பயன்படுத்தப்படுகிறது. பல துறைகளிலும் மனிதர்களுக்கு ஈடாக வேலை செய்யும் திறன் படைத்த கம்ப்யூட்டர் தொழில் நுட்பத்துடன் கூடிய `ரோபாட்'களை ஜப்பான், அமெரிக்கா உட்பட சில நாட்டு
விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர். மனிதர்களை போல ரோபாட்'டையும் உணர்வுபூர்வமானதாக உருவாக்க முடியும்; அதனால், கேள்விக்கு பதில் சொல்ல முடியும்.
இப்போது, மனிதர்களை போலவே, அதற்கும் முக்கிய உறுப்புகளை
உருவாக்கி, அவற்றை செயல் பட வைக்க முடியும்; அவற்றால் `செக்ஸ்' வைக்கவும் முடியும் என்று அதிர்ச்சி தரத்தக்க ஆராய்ச்சியில் இறங்கியுள்ளார் டேவிட் லெவி. கடந்த பல ஆண்டாக ஆராய்ச்சிகளை செய்து வரும் இவர், robot_almost_human_sfwஉணர்வுபூர்வ ரோபாட்' உருவாக்குவது பற்றி கூறுகையில், `ஒரு மனிதனின்
வாழ்க்கையில் செக்ஸ் முக்கிய பங்காற்றுகிறது. செக்ஸ் விஷயத்தில் ஒருவர் முழு திருப்தி கொண்டிருந்தால், அவரால் எதையும் சாதிக்க முடியும்; நீண்ட நாள் வாழ முடியும். "இப்போது கிடைக்கும் செக்ஸ்" பொம்மைகள், வெறும் சாதனம் தான்.
ஆனால், விருப்பு வெறுப் பின்றி மனிதனை போலவே செக்ஸ் தரும்
`ரோபாட்' டை உருவாக்கும் காலம் வெகுதுாரத்தில் இல்லை என்று கூறியுள்ளார். பிரிட்டனை சேர்ந்த லெவி, பிரபல செஸ் விளையாட்டு சேம்பியன்; அவருக்கு `ரோபாட்'டில் அதிக ஈடுபாடு. ஜப்பானிய விஞ்ஞானிகள் உருவாக்கும் `ரோபாட்'களை பார்த்து, அவருக்கு இதில் கவனம் திரும்பியது. பல வகை `ரோபாட்'களை உருவாக்கிய இவர் பார்வை, மனிதனை போலவே, `புசுபுசு' தோல் கொண்டதும், உணர்வுபூர்வமான `ரோபாட்'டை உருவாக்க சபதம் எடுத்தார். இவரது
இந்த ஆராய்ச்சி இன்னும் வெற்றி பெறவில்லை. ஆனால், அதற்கான வழிவகைகளில் வெற்றி கண்டு வருகிறார்.
`எனது ஆராய்ச்சி ஒரு தூண்டுகோல் தான். இது
உலகில் விரைவில் வரத்தான் போகிறது' என்று கூறியுள்ளார்
புரட்சிகரமான அறுவைச் சிகிச்சை மூலம் பார்வையை மீளப்பெற்ற நபர் பார்வையிழந்த நபரொருவருக்கு அவரது முரசினூடாக மேற்கொண்ட புரட்சிகரமான அறுவைச் சிகிச்சை மூலம் பார்வையை மீளப்பெறச் செய்து பிரித்தானிய மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
மார்ட்டின் ஜோன்ஸ் (42 வயது) என்ற இந்த நபர், 12 வருடங்களுக்கு முன் உலோகப் பட்டறையொன்றில் பணியாற்றுகையில் உருகிய அலுமினியத்தைக் கொண்ட குழாயொன்று வெடித்துச் சிதறியதில் பார்வையை முற்றுமுழுதாக இழந்தார்.
இந் நிலையில், அவரைப் பராமரிக்க நியமிக்கப்பட்ட பெண்ணான கில்லை (50 வயது) நான்கு வருடங்களுக்கு முன்னர் மணந்தார்.
விபத்து நடைபெற்ற போது 600 பாகை செல்சியஸ் வெப்பநிலையிலிருந்த திரவ அலுமினியம் வெடித்துச் சிதறியதில் அவருக்குப் பாரிய எரிகாயங்கள் ஏற்பட்டன. 23 மணி நேரம் அவசர சிகிச்சைப் பிரிவில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்த அவரது இடது கண் முற்றாக அகற்றப்பட்டது. அவரது வலது கண் அகற்றப்படாத போதும் அது பார்வைப்புல ஆற்றலை இழந்திருந்தது.
இந் நிலையில் மருத்துவர்கள் மார்ட்டினின் பற்களில் ஒன்றை அகற்றி, முரசினூடாக சிறிய துளை இட்டு விசேட பார்வை வில்லைகளை அவரது வலது கண்ணில் பொருத்தி அவருக்கு அக் கண்ணிலான பார்வைப் புலத்தை மீளக் கிடைக்கச் செய்துள்ளனர். அத்துடன் அவரது அகற்றப்பட்ட பல்லும் வெற்றிகரமாக மீளவும் உரிய இடத்தில் பொருத்தப்பட்டது.
இது தொடர்பில் மார்ட்டின் விபரிக்கையில்,
"நான் குருடாக இருந்தபோதே எனது மனைவியைச் சந்தித்தேன். அவர் முகத்தைப் பார்க்கவேண்டுமென்பதே எனது தீவிர ஆவலாக இருந்தது. மருத்துவர்கள் கண் கட்டை அவிழ்த்ததும் எதிரே நின்ற அவரை (மனைவியை) பார்க்க முடிந்தது. என்னால் நம்ப முடியவில்லை. கில் மிகவும் அழகாக இருக்கிறார். எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி உணர்வை விபரிக்க வார்த்தைகளில்லை" என்று கூறினார்
சூரிய மண்டலத்துக்கு வெளியே மிகவும் பிரகாசமான கோள் எமது சூரிய மண்டலத்துக்கு வெளியே அதி பிரகாசமான கோளொன்றை கண்டு பிடித்துள்ளதாக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் அறிவிப்புச் செய்துள்ளனர். இதுவரை கண்டறியப்பட்ட கோள்களிலேயே மிகவும் பிரகாசமான இக்கோள் துலா நட்சத்திர தொகுதியில் அமைந்துள்ளது.
"கிளியஸ் 581' நட்சத்திர சுற்றுவட்டப்பாதையில் அமைந்துள்ள இக்கோளானது பூமியை விட சுமார் இரு மடங்கு பெரிதாகும். சிலியின் லா சில்லாவிலுள்ள 3.6 மீற்றர் நீளமான தொலைக்காட்டி மூலமே இந்தக் கோள் அவதானிக்கப்பட்டது.
சூரிய மண்டலத்துக்கு வெளியே இதுவரை கண்டறியப்பட்ட கோள்களிலேயே மிகவும் சிறிய கோள் இதுவென சுவிட்ஸர்லாந்திலுள்ள ஜெனீவா விண்வெளி அவதான நிலையத்தைச் சேர்ந்த மைக்கல் மேயர் தெரிவித்தார்.
அடுத்த ஆண்டில் கூகிள் ஆபரேடிங் சிஸ்டம் கூகிள் இன்று புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது .அடுத்த ஆண்டு நடுவில் கூகிள் (Chrome OS) ஆபரேடிங் சிஸ்டம் வெளியிடுகிறோம் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.ஓபன் சோர்ஸ் முறையில் அந்த (os) இயங்கும் என்று அறிவிக்க பட்டுள்ளது.மேலும் இந்த புதிய (os)லைட் வெயிட் ஆகா இருக்கும் லினக்ஸ் கெர்னலை அடிபடையாக கொண்டு உருவாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இது முற்றிலும் புதிய ப்ராஜெக்ட் கூகிள் (android) லிருந்து வித்யாசபடும் என்றும் அறிவித்துள்ளது .
புதிய இயங்குதளம் மூலம் இணையம் தொடர்பான சேவைகளை உடனடியாக பெறமுடியும் என்றும் .மேலும் வைரஸ் போன்ற பிரச்சனைகளையும் தவிர்க்கும் வகையில் இந்த இயங்கு தளம் உருவாக்கப்படும் என்று தெரிகிறது. இந்த இயங்குதளத்தின் முக்கிய குறிக்கோள் வேகம்,பாதுகாப்பு,எளிமை. அதாவது இந்த புதிய (os) இயக்குவதற்கு வேகமாகவும் ,வைரஸ் போன்ற பிரச்சினைகளில் இருந்து பாதுகாப்பாவும் ,பயன்படுத்துவதற்கு மிக எளிமையாகவும் இருக்கும்.இந்த இயங்கு தளம் இணையத்தை அடிபடையாக கொண்டு இயங்கும் என்றும் அதனால் ஏற்கனவே உள்ள இணையம் தொடர்பான (web based applications)மென் பொருட்கள் எந்த மாற்றமும் செய்யாமல் இதில் இயங்கும் என்றும் தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு நடுவில் (netbooks)இக்கு கூகிள் கிரோம் (0s)வெளியிடப்படும் பின்பு ஆல்பா பதிப்பு வெளியிட்டு பல்வேறு விதமான சோதனைகள் மேற்கொள்ள படும் என்று கூறியுள்ளது .
கூகுளின் இந்த அதிரடி அறிவிப்பால் மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கும் கூகுளுக்கும் கடும் போட்டி நிலவும்.கூகுளின் சவாலை மைக்ரோசாப்ட் சமாளிக்குமா ? என்பதை பொறுத்து இருந்து பார்போம்
அழிக்க முடியாமல் இருக்கும் File களை அழிப்பதற்கு ஒரு மென்பொருள்(softare)-Unlocker
(வீடியோ) நெவர் லண்டில் மைக்கல் ஜக்ஸனின்
ஆவி? எச்சரிக்கை! பயப்படுபவர்கள்
பார்க்க தவிர்க்கப்பட்டுள்ளது
கணினியை இணைய வழங்கியாக மாற்றுதல் கோப்புகளை பகிர கணினியை இணைய வழங்கியாக மாற்றுதல் . உங்களின் தனிப்பட்ட புகைப்படங்கள், கோப்புகள், பாடல்கள் வைத்து உள்ளீர்கள். அவற்றை உங்கள் உறவினர் / நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறீர்கள். கோப்பு பகிரும் தளங்கள் (File Sharing Sites) , பிகாஸா போன்ற புகைப்படம் பகிரும் தளங்கள் மூலம் இணையத்தில் ஏற்றி அவற்றை பகிர விருப்பமில்லை.
உங்கள் முக்கிய கோப்புகளை இல்ல கணினியில் (Home PC) வைத்து உள்ளீர்கள். இல்லத்தில் உள்ள கணினியின் கோப்புகளை உங்கள் அலுவலகத்தில் இருந்து அணுக வேண்டும் என்று நினைக்கிறீர்கள்.
ஒரு இணைய தளம் உருவாக்கி அதனை HTML கோப்புகளாக உங்கள் கணினியில் வைத்து உள்ளீர்கள். அவற்றை இணையத்தில் ஏற்றி இணையதளமாக அனைவரும் பார்க்கும் வண்ணம் அமைக்க வேண்டும் எனில் Web Hosting சேவை காசு கொடுத்து வாங்க வேண்டி இருக்கும். அல்லது இலவச சேவைகளை தேடி அலைய வேண்டி வரலாம்.
இது போன்ற தருணங்களில் மேலே சொன்ன அனைத்து வேலைகளையும் உங்கள் கணினியையே இணைய வழங்கியாக (Web Server) மாற்றி செய்ய இயலும். இணைய உலாவிகளில் சிறப்பிடம் பிடித்த ஒபேரா (Opera) இதற்கான வசதியை Unite என்ற பெயரில் வழங்குகிறது. இத்தனை உபயோகிக்க ஆழ்ந்த இணையம் சார்ந்த அறிவு தேவை இல்லை.
இதனை இங்கு சென்று தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவி கொள்ளுங்கள்.
மைக்ரோசாப்ட்டின் இலவச ஆண்டிவைரஸ் மொர்ரோ தனிப்பட்ட உபயோகங்கள், வர்த்தக தேவைகள் என்று கணினியை உபயோகிக்கும் போது அதன் பாதுகாப்பு முக்கியமாகிறது. வைரஸ், டிரோஜன், ஸ்பைவேர் என்று கணினியின் பாதுகாப்பு கேள்விக்குரியதாகவே உள்ளது. இயங்குதளங்களுக்கு (Operating System) இருக்கும் தேவைகளை போலவே ஆண்டிவைரஸ் மென்பொருள்களுக்கும் நல்ல தேவை உள்ளது. Symantec, Kaspersky, McAfee என்று பல நிறுவனங்களும் இத்துறையில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன.மைக்ரோசாப்ட்டும் வணிக ரீதியில் Windows Live Onecare எனும் ஆண்டிவைரஸ் மென்பொருளை விற்று வருகிறது.
விரைவில் விண்டோஸ் கணினிகளின் பாதுகாப்பை அதிகப்படுத்தும் பொறுத்து புதிய இலவச ஆண்டிவைரஸ் மென்பொருளை இந்த ஆண்டின் இறுதியில் வெளியிட போவதாக மைக்ரோசாப்ட் அறிவித்து உள்ளது. அதற்கு மொர்ரோ (Morro) என்று பெயரிட்டு உள்ளது.
தற்போது விற்று வரும் Windows Live Onecare விற்பனையை நிறுத்த முடிவு செய்து உள்ளார்கள். புதிய மொர்ரோ ஆண்டிவைரஸ் விண்டோஸ் எக்ஸ்பி , விஸ்டா, விண்டோஸ் 7 போன்றவற்றில் இயங்கும்படி உருவாக்கப்பட்டு உள்ளது. வைரஸ், டிரோஜன், ரூட்கிட், ஸ்பைவேர் உள்ளிட்ட அனைத்து வில்லங்க மென்பொருள்களை நீக்கும் வண்ணம் இது இருக்கும் என்கிறார்கள். இதன் பீட்டா பதிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம்.
தற்போது ஆண்டிவைரஸ் மென்பொருள்களை விலை கொடுத்து வாங்க வேண்டி இருப்பதால், அதனை இலவசமாக அளித்தால் தன் நிறுவனத்தின் இயங்குதளங்கள் (OS) விற்பனையை கூட்டலாம் என்று மைக்ரோசாப்ட் கணக்கு போடுகிறது. அது நடக்கலாம். எப்படியோ பயனர்களுக்கு நல்ல இலவச ஆண்டிவைரஸ் கிடைத்தால் மகிழ்ச்சிதான்
மனதில் நினைத்தாலே நகரும் 'வீல் சேர்!' ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு, இந்த நாற்காலி முன்னால் செல்ல வேண்டும், வலது புறம் திரும்ப வேண்டும் என மனதில் நினைத்தால் போதும், அப்படியே நாற்காலி நகரும் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா?நம்பித் தான் ஆகவேண்டும்; படிங்க மேலே... ஒருவர் தனது கை கால்களை அசைக்காமல், மனதில் நினைத்தாலே நகரும் வகையிலான சக்கர நாற்காலியை ஜப்பான் ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து, டொயாட்டோ நிறுவனம் வடிவமைத்துள்ளது. மூளையில் இருந்து வெளிப்படும் அலைகளை கிரகித்து அதற்கேற்ப இந்த சக்கர நாற்காலி இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என டொயாட்டோ மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, டொயாட்டோ மோட்டார் நிறுவனம் கூறியதாவது:
மின்னணு தொழிலநுட்பத்துடன் தயாரிக்கப்படும் இந்த சிறப்பு சக்கர நாற்காலிக்கு தானியங்கி சக்தி உண்டு. அதில், அமர்ந்திருப்பவரின் மூளையில் இருந்து வெளிப்படும் அலைகளை கிரகித்து கொள்ளும் வகையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள தொப்பி ஒன்றை அவர் தலையில் அணிந்துகொள்ள வேண்டும்.மூளையில் இருந்து வெளிப்படும் அலைகளை கிரகிக்கும் தொப்பியிடம் கிடைக்கும் மின் ஆற்றல் மூலம் சக்கர நாற்காலி இயங்கும். சக்கர நாற்காலியில் அமர்ந்திருப்பவர், கை கால்களை அசைக்க வேண்டிய அவசியம் இல்லை. எங்கு போக வேண்டும் எந்த பக்கம் திரும்ப வேண்டும் என்று நினைத்தாலே போதும்; சக்கர நாற்காலி தானாக நகரும் என்றனர்.
தினமும் ஒயின் குடித்தால் நீண்டநாள் வாழலாம் நோயின்றி நீண்ட நாட்கள் வாழ உணவில் கட்டுப்பாடு அவசியம் என முந்தைய ஆய்வு தகவல்கள் தெரிவித்தன. அதன் மூலம் மூளையில் நோய்கள் ஏற்படாது. ஞாபக சக்தியில் எந்தவித பிரச்சினையும் ஏற்படாது.
அளவான உணவை சாப்பிட்டால் இதய நோய்கள் வராமல் தடுக்கலாம். கேன்சர் நோய் ஏற்படாது என்று கூறப்பட்டது. தினமும் சாப்பிடும் போது மது அருந்தினால், குறிப்பாக ஒயின் குடித்தால் நோயின்றி நீண்ட நாள் வாழலாம் என தற்போதைய ஆய்வு தெரிவித்துள்ளது.
அத்துடன் சிறிதளவு இறைச்சி மற்றும் இறைச்சி சம்பந்தப்பட்ட உணவு வகைகளை உணவுடன் சேர்த்து கொள்ள வேண்டும். அதே சமயம் அதிக அளவு காய்கறிகள், பழங்கள் மற்றும் கொட்டை வகை உணவுகள், ஆலில் எண்ணையையும் சேர்த்து சாப்பிட்டால் நோயின்றி வாழலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த ஆய்வை லண்டனில் உள்ள பொது சுகாதார கல்வி நிறுவனம் நடத்தியது. 23 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த விவரம் தெரிய வந்துள்ளது.
AVI கோப்புகளை MP4 கோப்புகளாக மாற்ற கணினியில் நாம் அடிக்கடி பார்க்கும் வீடியோ கோப்புகளின் வடிவமானது AVI என அமைந்திருக்கும். இந்த வடிவானது, iPhone, iPod, Zune, PSP, PS3 போன்ற கருவிகளுடன் ஒத்திசைவு (compatibility) இல்லாதது. MP4 வடிவங்களையே மேற்கண்ட கருவிகள் ஏற்றுக்கொள்கின்றன.
AVI கோப்புகளை MP4 ஆக மாற்றுவதற்கு ஒரு இலவச மென்பொருள் உள்ளது. அதன் பெயர் Convert AVI to MP4. இதன் மூலம் WMA, MOV, MPEG1 / MPEG2, DivX ஆகிய பல்வேறு விதமான கோப்பு வடிவங்களை MP4 ஆக மாற்ற முடியும்.
மிகஎளிமையான முகப்பைக் கொண்ட மென்பொருள் இது. இது Windows XP மற்றும் Windows Vista இந்த இயங்குதளங்களில் இயங்கும்.
கூகிள் குரோம் இப்பொழுது தமிழில் கூகிள் குரோம் 2.0 இப்பொழுது 8 இந்திய மொழிகளில் வந்துள்ளது அவை தமிழ், ஹிந்தி, பெங்காலி, குஜராத்தி, கன்னடா, மலையாளம், மராத்தி, ஒரியா மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் தரவிறக்கம் செய்து கொள்ள்லாம்.
கூகிள் குரோம் தமிழில் தரவிறக்கம் செய்ய முதலில் கூகிள் குரோம் இணைய பக்கத்திற்கு சென்று கீழே காண்பிக்கப்பட்டுள்ள் படத்தை போல் தமிழ் மொழியை தேர்வு செய்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கூகிள் குரோமின் அம்சங்கள்
Google Chrome என்பது, வலையை வேகமாக, பாதுகாப்பாக மற்றும் எளிதாக அணுகுவதற்கு உதவும் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் குறைந்தபட்ச வடிவமைப்பையும் ஒருங்கே கொண்டுள்ள ஓர் உலாவியாகும் மேலும் தமிழில் படிக்க .
கூகிள் குரோம் உலாவியை கட்டமைத்தற்கான காரணத்தைப் பற்றி:
Google இல் பெரும்பாலான நேரம் உலாவியிலேயே நாங்கள் செலவிடுகிறோம். தேடுவது, அரட்டையடிப்பது, மின்னஞ்சலனுப்புவது மற்றும் ஒருங்கிணைவது ஆகிய அனைத்தையும் ஓர் உலாவியில் செய்கிறோம். உங்கள் எல்லோரையும் போலவே, எங்கள் ஓய்வு நேரத்தில் ஷாப்பிங், வங்கிப் பணிகள், செய்திகள் படிப்பது மற்றும் நண்பர்களிடம் பேசுவது போன்றவற்றைச் செய்கிறோம் – இவை அனைத்தும் ஓர் உலாவியைப் பயன்படுத்தியே செய்கிறோம். மக்கள் ஆன்லைனில் செலவிடும் நேரம் அதிகரித்துக்கொண்டே வருகிறது, மேலும் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு வலை உருவான போது கற்பனை செய்தும் பார்க்காத விஷயங்களை இப்போது செய்கிறார்கள்.
வலை டெவலப்பர்களுக்கான தகவல்
இணையப் பயனர்களுக்கு இன்றைய நிலையில் Firefox, Safari, Opera, இப்போது Google Chrome உட்பட, பலவகையான வலை உலாவிகளைத் தேர்வுசெய்யும் வாய்ப்புள்ளது. சில நேரங்களில் வலைப்பக்கங்கள் ஒவ்வொரு உலாவியிலும் வெவ்வேறு விதமாக தோற்றமளிக்கின்றன மற்றும் செயல்புரிகின்றன. எனவே நீங்கள் வடிவமைத்த அமைப்பிலேயே, உங்களுடைய அனைத்து பயனர்களும் வலைப்பக்கங்களைக் காண்கிறார்கள் என்பதை உறுதி செய்ய, அனைத்து உலாவிகளிலும் உங்கள் தளத்தைச் சோதிக்க வேண்டியது அவசியம்.
நெருப்பு நரி (FireFox) 3.5 இல் இப்போது நீங்கள் தமிழ் version நிறுவிக்கொள்ள முடியும், இது இந்திய தமிழ், இலங்கை தமிழ் என 2 பிரிவுகளாக உள்ளது, இதை நிறுவி பாருங்கள்
ரொம்ப நல்லாக்தாம்பா செய்து இருக்கிறாங்க..
1. இந்திய தமிழ்
2. இலங்கை தமிழ்